பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில் ஆசிரியரை நியமிக்கக் கோரிக்கை

தருமபுரியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில்  ஆசிரியர்  பணியிடத்தை நிரப்ப வேண்டும் என

தருமபுரியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில்  ஆசிரியர்  பணியிடத்தை நிரப்ப வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:  தருமபுரியில் பார்வையற்ற  மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும், கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர் பணியிடம் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்விக் கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இச் சிறப்புப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி,  ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்லிடப் பேசி வழங்க வலியுறுத்தல்: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய பேசும் வசதி கொண்ட செல்லிடப்பேசி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இத்தகைய செல்லிடப்பேசிகளை வழங்கக் கோரி, சுமார் 200 - க்கும் மேற்பட்டோர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். எனவே, இம் மனுக்களை பரிசீலித்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு செல்லிடப் பேசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இச் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com