சுடச்சுட

  

  சி.ஏ. தேர்வு: கடத்தூர் கிரீன்பார்க் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

  By DIN  |   Published on : 26th June 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடத்தூர் கிரீன்பார்க்  சி.பி.எஸ்.இ.  பள்ளி மாணவர்கள் சி.ஏ. இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
  ஐ.சி.ஏ.ஐ. சார்பில், தேசிய அளவிலான பட்டயக் கணக்கர் தேர்வு அண்மையில் நடைபெற்றது.  இந்தத் தேர்வுகளில் பங்கேற்ற கடத்தூர் கிரீன்பார்க்  சிபிஎஸ்இ  பள்ளி மாணவ, மாணவியர் முதல் நிலைத் தேர்வில் 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து, 2-ஆம் நிலைத் தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  இதையடுத்து, சி.ஏ. இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு  புதுதில்லியில்,  ஐசிஏஐ நிறுவனம் சார்பில், ஊக்கத் தொகைகள்  மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
  இந்த நிலையில், சி.ஏ. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கிரீன்பார்க்  கல்வி நிறுவனங்களின் தலைவர் எவரெஸ்ட் ஆர். முனிரத்தினம், குலோபல் லா  பவுண்டேசன் நிறுவனத் தலைவர் ரா. சரவண அரவிந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
   இதில், பள்ளியின் செயல் அலுவலர் ராஜா, பள்ளி முதல்வர் திவ்ய ஸ்ரீ, ஊடகவியலாளர் மகேந்திரன்,  பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai