சிறார் தொழிலாளர் தடைச் சட்ட விழிப்புணர்வு முகாம்

தருமபுரி இலக்கியம்பட்டி சிஎம்எஸ் குழந்தைகள் இல்லத்தில்,  சிறார்  தொழிலாளர் தடைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு  முகாம்  நடைபெற்றது.

தருமபுரி இலக்கியம்பட்டி சிஎம்எஸ் குழந்தைகள் இல்லத்தில்,  சிறார்  தொழிலாளர் தடைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு  முகாம்  நடைபெற்றது.
தருமபுரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.ராஜ்குமார் முகாமிற்கு தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.சிவகாந்தி வரவேற்றார். சட்டப் பணிகள் ஆணையச்  செயலர்,  சார்பு நீதிபதி ராஜேந்திரகண்ணன் முன்னிலை வகித்தார்.  இதில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சாந்தி, குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் (எண் 1) செல்வராஜ்,  ரகோத்தமன் (எண் 2), விரைவு நீதிமன்ற நடுவர் ஏ.வனிதா ஆகியோர் பேசினர். இதில், சிறார் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சிறார் தொழிலாளர்கள் தடைச் சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com