தென் இந்திய தரை வளைப்பந்து போட்டி
By DIN | Published On : 04th March 2019 08:27 AM | Last Updated : 04th March 2019 08:27 AM | அ+அ அ- |

தருமபுரியில் நடைபெற்ற தென் இந்திய அளவிலான தரை வளைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும், பெண்கள் பிரிவில் கர்நாடக அணியும் வெற்றி பெற்றன.
தென் இந்திய அளவிலான தரை வளைப்பந்து போட்டி, தருமபுரியில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இதில், தெலங்கான, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய அணிகள் விளையாடின. ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியையும், பெண்கள் பிரிவில் கர்நாடக அணி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியையும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஹாக்கி வீரர் அஸ்வின் கோப்பைகளை வழங்கினார். தமிழக தரை வளைப்பந்து பயிற்சியாளர் மகத் நம்பியார், வளைபந்து கழகச் செயலாளர் விஷ்ணு உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.