அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல்: பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆட்சியர்  ஆய்வு

அரூர்,    பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்ட  ஆட்சியர் சு.மலர்விழி மேற்கொண்டார்.

அரூர்,    பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்ட  ஆட்சியர் சு.மலர்விழி மேற்கொண்டார்.
 தருமபுரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்,  அரூர், பாப்பிரெட்டிப்பட்டி  ஆகிய 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-இல்  நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் அரூர் தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 314 வாக்குச்  சாவடிகளும் உள்ளன. இதில், அரூர் தொகுதியில் 6 வாக்குச் சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டி  தொகுதியில் 5 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும்,  தலா 46 வாக்குப் பதிவு மையங்கள் தேர்தல் நேரத்தில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மையங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
இதையடுத்து,   நத்தமேடு, மெணசி, மோளையானூர், குருபரஹள்ளி, மாம்பட்டி, ச.பட்டி, கொளகம்பட்டி, மருதிப்பட்டி, சிந்தல்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட  வாக்குச் சாவடிகள், வாக்குப் பதிவு  மையங்களை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன், இடைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜி.புண்ணியக்கோட்டி(அரூர்), டி.ஆர்.கீதா ராணி (பாப்பிரெட்டிப்பட்டி) உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆய்வு  நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
 ஆய்வின்போது, வாக்காளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள்,  முன்னர் நடைபெற்றுள்ள மோதல் சம்பவங்கள், பொதுமக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
குந்தாரப்பள்ளி, கோடிப்பள்ளி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள்,  வேப்பனஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களை அவர் ஆய்வு செய்தார். 
மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் வசதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். 
இதுதவிர,  பொது இடங்கள், நெடுஞ்சாலையையொட்டி உள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஆகியவற்றை மறைக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர், பறக்கும் படையினர் மேற்கொள்ளும் வாகனத் தணிக்கையும் அவர் ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com