சுடச்சுட

  

  அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப் பதிவுகள் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் அளித்தல், சட்டம்-ஒழங்கு பிரச்னை, தேர்தல் விதிமீறல் குறித்த தகவல்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
  இதற்காக அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளின் தொடர்பு எண்கள்: அரூர்- 04346-221400, பாப்பிரெட்டிப்பட்டி- 04346-246544.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai