சுடச்சுட

  

  பொள்ளாச்சி விவகாரம்: பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 16th March 2019 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி தொலைத்தொடர்பு நிலையம் அருகே ஜனநாயக மாதர் சங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, தோழி கூட்டமைப்பு, இந்திய தேசிய மாதர் சம்மேளனம், ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வெள்ளிக்
  கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.கிரைஸாமேரி, தோழி கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் சங்கர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் இரா.எழில்அரசு, முன்னாள் மாவட்டச் செயலர் ஏ.குமார், ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் ஆர்.தர்மலிங்கம், மாதர் சம்மேளன மாவட்டச் செயலர் கமலா உள்ளிட்டோர் பேசினர்.
  ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் ஏ.சேகர், மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் உள்ளிட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai