சுடச்சுட

  

  அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

  By DIN  |   Published on : 17th March 2019 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


   அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி அறிவுறுத்தினார்.
  மக்களவைத் தேர்தல் மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி பேசியது: 
  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல், பிரசாரம் மேற்கொள்ளும் போது தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
  இதைத் தொடர்ந்து, தருமபுரி தொகுதி மக்களவைத் தேர்தலுடன் அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
  காவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில், தருமபுரி காவல் உள்கோட்டைத்தைச் சேர்ந்த காவலர்களுக்கான, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், சார்- ஆட்சியர் ம.ப.சிவன் அருள், தேர்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர், காவலர்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai