சுடச்சுட

  


  ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி ஊராட்சி,  என்.வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமைநடைபெற்றது.
  விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை காந்திமதி தலைமை வகித்தார். நொச்சிப்பட்டி, என்.வெள்ளாளப்பட்டி, கணக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 56 மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும், 2019-20-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  இதையடுத்து, நொச்சிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, கணக்கம்பட்டி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்களும், இளைஞர்களும் கலந்துகொண்டு பள்ளிக்குத் தேவையான இருக்கை, குடம், டம்ளர், கேரம் போர்டு, நாள்காட்டி, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பொருள்களை மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்து பள்ளிக்கு சீர்வரிசையாக வழங்கினர். சீர்வரிசையை பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சீர்வரிசையை வழங்கி சிறப்பித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai