சுடச்சுட

  


  அரூரில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
  தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. அரூர் தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும்
  உள்ளன.
  இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள், வாக்குப்பதிவுகள், தேர்தல் விதிமுறைகள் குறித்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு அரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜி.புண்ணியக்கோட்டி வழங்கினார். இந்த பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai