சுடச்சுட

  

  அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் தொடர்பான சட்டம்- ஒழுங்குப் பராமரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் அரூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு அரூர் கோட்டாட்சியர் ஜி.புண்ணியகோட்டி தலைமை வகித்தார். டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் பேசியது : 
  தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்கள் வாக்காளர்கள் தெரிவிக்கும் புகார்கள், கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிய வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் காவல் துறையினர் சமமாக நடத்த வேண்டும். யாரிடமும் பாரபட்சம் காட்டக் கூடாது. 
  வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரையிலும் தடை செய்யப்பட்ட பகுதியாகும். இப் பகுதியில் வாக்காளர்கள் தவிர பிறரை அனுமதிக்கக் கூடாது. வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள், வாக்காளர்களுக்கு பணம் அளித்தல் உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் மீது காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டி.ஆர்.கீதா ராணி, வட்டாட்சியர் செல்வகுமார், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai