சுடச்சுட

  

  வெண்ணாம்பட்டியில்ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பறிமுதல்

  By DIN  |   Published on : 17th March 2019 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சத்தை தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
  தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் அழகுசுந்தரம் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு கண்காணிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த குளியனூரைச் சேர்ந்த பெரியண்ணன் (37) என்பவரின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இச் சோதனையில், பெரியண்ணன் காரில் ரூ.5 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. 
  மேலும், இந்த பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால், அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை, தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதேபோல, வே.முத்தம்பட்டியில் வெள்ளிக்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், அவ்வழியே வந்த ஜருகுவைச் சேர்ந்த பஞ்ஞாட்சரம் மற்றும் அவரது நண்பர் அன்பழகன் ஆகிய இருவரும் உரிய ஆவணங்களின்றி ரூ.1.83 லட்சத்தை கொண்டு சென்றது தெரிவந்தது. இதைத் தொடர்ந்து, அப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai