அரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக கிருஷ்ணகுமார் போட்டி

அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக செ.கிருஷ்ணகுமார் (44), போட்டியிடுகிறார்.

அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக செ.கிருஷ்ணகுமார் (44), போட்டியிடுகிறார்.
பி.இ. சிவில் என்ஜீனியரிங் படித்துள்ள  இவர்  கட்டுமானப் பொறியாளராவார்.  திமுக பொறியாளர் அணியில் தருமபுரி மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்.   1974- ஆண்டு ஜூலை 25-இல் பிறந்தார். 
இவரது தந்தை  மா.சென்னகிருஷ்ணன்.   இவருக்கு மனைவி வனிதா, மொரப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார். இவர்களது மகன் ஆதித்யா.
அரூர் அருகேயுள்ள மோப்பிரிப்பட்டி கிராமத்தில் வசித்துவரும் இவர்,   முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com