Enable Javscript for better performance
அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை- Dinamani

சுடச்சுட

    

    அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை

    By DIN  |   Published on : 27th March 2019 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் அலுவலர்களால் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
    மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அனைத்து வாக்காளர்களும் 100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி, காரிமங்கலம் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ஆர்த்தி தலைமையில் அலுவலர்கள், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். 
    மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு, ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் குறித்தும் வாக்காளர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும்,  சி-விஜில் செயலி மூலமும், 1950 என்கிற தொலைபேசியிலும் தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் என தேர்தல் விழிப்புணர்வு அலுவலர்கள் வாக்காளர்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai