Enable Javscript for better performance
அஸ்ஸாம் மாநிலத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி மனு- Dinamani

சுடச்சுட

    

    அஸ்ஸாம் மாநிலத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி மனு

    By DIN  |   Published on : 27th March 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஸ்ஸாம் மாநிலத்தில் மர்மான முறையில் உயிரிழந்த, லாரி ஓட்டுநரின் உடலை மீட்டு, உரிய விசாரணை நடத்தக் கோரி அவரது மனைவி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தார்.
    இது குறித்து, தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரியா (33) என்பவர், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரகமத்துல்லாகானிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர்  பாலமுருகன். லாரி ஓட்டுநரான இவர், அண்மையில், அஸ்ஸாம் மாநிலத்துக்கு லாரியை ஓட்டிச்சென்றார். இதைத் தொடர்ந்து, அவர் தொடர்பான எவ்வித விவரமும் தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த மார்ச் 24-ஆம் தேதி எனது கணவர் அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் உயிரிழந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக சந்தேகம் உள்ளது. எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி, உயிரிழந்த எனது கணவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai