Enable Javscript for better performance
இடைத் தேர்தல்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் வேட்பாளர்கள் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    இடைத் தேர்தல்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் வேட்பாளர்கள் மனு தாக்கல்

    By DIN  |   Published on : 27th March 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.ம.மு.க வேட்பாளர்கள் உள்பட 23 பேர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அ.ம.மு. க.வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன்,  அ.ம.மு.க. மாற்று வேட்பாளர் ரா.ரமேஷ்குமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் நல்லதம்பி (42),  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சதீஷ் , சுயேச்சை வேட்பாளர்கள் ஆனந்தகுமார் (42),   மூர்த்தி (48),  சி.ராஜேந்திரன் (43), எஸ்.கோவிந்தசாமி  (49),   ஏ.கோவிந்தசாமி,  மணி (25),  ஸ்ரீதர்  (40) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 
    அரூர் சட்டப் பேரவைத் தொகுதி
    அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அ.ம.மு. க. வேட்பாளர் ஆர்.முருகன்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெ.திருப்பதி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கொ.குப்புசாமி,  சுயேச்சை வேட்பாளர்கள் தீ.வேடியப்பன், மா.சரத்குமார்,  பெ.வைகுந்தன், 
    பெ.முருகன், கே.மகேந்திரன், தீ.அன்புதீபன்,  மூ.மணி, சி.சென்னகிருஷ்ணன், சி.மணிவண்ணன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai