Enable Javscript for better performance
தருமபுரி மக்களவைத் தொகுதி:அ.ம.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மக்களவைத் தொகுதி: அ.ம.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்

    By DIN  |   Published on : 27th March 2019 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
    தருமபுரி மக்களவைத் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தலைமை நிலையச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
    இதைத் தொடர்ந்து அவர்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  இதனைத் தொடர்ந்து,  பி.பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறியது:  அ.ம.மு.க.வுக்கு எவ்வளவு சோதனை அளித்தாலும் அவற்றையெல்லாம் கடந்து மக்கள் மத்தியில் எங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.  உச்ச நீதிமன்றம் எங்களுக்கு பொதுசின்னம் வழங்க உத்தரவிட்டுள்ளது.  இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 
    தருமபுரி மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டம் அறிவித்தபோது,  அதற்கு எதிராக வழக்கு தொடுத்தவர் அன்புமணி ராமதாஸ்.  இத் திட்டத்தில் அவர் முதல்வரை விமர்சித்தார். ஆனால்,  இப்போது அவருடைய நிலை மாறியுள்ளது.  தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்படாத நிலையில், அடிக்கல் நாட்டியிருப்பது ஏமாற்று வேலை.
    எங்களுக்கு போட்டியாக யாரையும் நான் கருதவில்லை.  தருமபுரி மட்டுமல்ல, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல்களிலும் எங்களது வேட்பாளர்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்,  நான் அமைச்சராக இருந்தபோது, அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.  தருமபுரியில் நீர்ப் பாசனத் திட்டங்களையும்,  சிப்காட் தொழிற்பேட்டையை கொண்டு வந்து வேலைவாய்ப்பையும், கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
    அப்போது, எஸ்.டி.பி.ஐ.  மாநில துணைத் தலைவர் ஏ.அம்ஜித் பாஷா,நிர்வாகிகள் எம்.முனுசாமி,  உமேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai