Enable Javscript for better performance
தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 27 பேர் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 27 பேர் மனு தாக்கல்

    By DIN  |   Published on : 27th March 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 27 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) அறிவிக்கப்பட்டது. இதில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தி.மு.க. வேட்பாளர் டி.என்.வி.செந்தில்குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.ராஜசேகர்,  நாம் தமிழர் கட்சி சார்பில் ருக்மணி தேவி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சி.சிவானந்தம் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், ஓரிரு கட்சி வேட்பாளர்கள் மூன்று மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். 
    இதனால், மொத்தம் 36 வேட்புமனுக்கள் மாவட்டத் தேர்தல் அலுவலர் சு.மலர்விழியிடம் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை (மார்ச் 27)  நடைபெற உள்ளது. மேலும், மனுக்களை திரும்பப் பெற மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு பிறகு தருமபுரி மக்களவைத் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவரும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai