Enable Javscript for better performance
தருமபுரி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் டி.ராஜசேகர் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
    தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் சார்பில் காரிமங்கலம் அடுத்த பந்தாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் டி.ராஜசேகர் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை அண்மையில் அறிவித்தது.
    இதைத் தொடர்ந்து, டி.ராஜசேகர் தனது கட்சி நிர்வாகிகளுடன், தருமபுரி மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
    இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரும், நானும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, எங்கள் இருவருக்கிடையே தான் இத் தேர்தலில் போட்டி நிலவும். இத் தேர்தலில் வாக்களிப்போரில் அதிகமானோர் இளைஞர்களாவர். எனவே அவர்களிடம் மௌனப் புரட்சி ஏற்பட்டுள்ளது. 
    எனவே, மக்கள் நீதி மய்யம் வெற்றிப்பெறுவது உறுதி. நான் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். நீர் ஆதாரங்களைப் பெருக்கப் பாடுபடுவேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai