Enable Javscript for better performance
மேக்கனாம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேக்கனாம்பட்டி கிராமத்தில்  குடிநீர் பற்றாக்குறையால் அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    இக் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து  வருகின்றனர்.  இப்பகுதியில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் 5 குடங்கள் கிடைக்கிறதாம். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிலர் தண்ணீரை விலை கொடுத்து  வாங்கி பயன்படுத்துகின்றனர். வசதியில்லாதவர்கள் 4 கி.மீ. சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். அதனால் குடிநீர் பற்றாக்குறையை போக்க
    விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai