Enable Javscript for better performance
லஞ்ச வழக்கில் முன்னாள் நிலஅளவையருக்கு ஓராண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் நிலஅளவையர்  சிவக்குமார் (65) என்பவருக்கு,  தருமபுரி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
    தருமபுரி மாவட்டம்,  பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 2009 - இல் தனது நிலத்தை அளவீடு செய்வதற்காக  அப்போதைய நிலஅளவையர் சிவக்குமாரை என்பவரை அணுகியுள்ளார். ஆனால் அவர்,  நிலத்தை அளவீடு செய்வதற்காக ரூ.5000  லஞ்சம் தர வேண்டும் எனக்  கோரியுள்ளார். லஞ்சம் தர மனமில்லாத ராஜா,  இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் அளித்த ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.2,500-ஐ நிலஅளவையாளரிடம் அளித்துள்ளார். 
    அதனை அவர் பெறும்போது, அங்கிருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், நிலஅளவையர் சிவக்குமாரை கைது செய்தனர்.
    இந்த வழக்கு தொடர்பான விசாரணை தருமபுரி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு விசாரணை முடிவில் நிலஅளவையர் சிவக்குமாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.6000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai