Enable Javscript for better performance
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 23 வேட்பு மனுக்கள் புதன்கிழமை ஏற்கப்பட்டன.
    அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, மார்ச் 19 முதல் 26-ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
    அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 40 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜி.புண்ணியக்கோட்டி, டி.ஆர். கீதா ராணி ஆகியோர்  முன்னிலையில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் புதன்கிழமை பரிசீலனைகள் செய்யப்பட்டன.
    பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி.... பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆ. கோவிந்தசாமி, திமுக வேட்பாளர் ஆ. மணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டி.கே. ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.சதீஷ், மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் எம். நல்லதம்பி, சுயேச்சை வேட்பாளர்கள் ஏ. கோவிந்தசாமி, எஸ். கோவிந்தசாமி, பி.மணி, எஸ்.முருகன், ஆர். ரமேஷ்குமார், சி. ராஜேந்திரன், வி. ராஜ்குமார் ஆகியோரது 12 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
    அதிமுக மாற்று வேட்பாளர் ஜி. மதிவாணன், உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.சசிகுமார், தமிழர் மக்கள் கட்சி வேட்பாளர் பி.வேடியப்பன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.சதீஷ், சுயேச்சை வேட்பாளர்கள் கே.அய்யாக்கண்ணு, பி. மூர்த்தி, கே. ஆனந்தகுமார், கே.ஸ்ரீதர் ஆகியோரது 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 
    அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி... அரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில், அதிமுக வேட்பாளர் வே. சம்பத்குமார், திமுக வேட்பாளர் செ. கிருஷ்ணகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெ. திருப்பதி, பெ. திலீப், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஆர். முருகன், சுயேச்சை வேட்பாளர்கள் தீ. அன்புதீபன், மா. சரத்குமார், மூ. மணி, பெ. முருகன், பூ. பார்த்திபன், பெ. வைகுந்தன் ஆகியோரது 11 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 
     மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் கொ. குப்புசாமி, அதிமுக மாற்று வேட்பாளர் தீ. சாமிக்கண்ணு, சுயேச்சை வேட்பாளர் சென்னகிருஷ்ணன் (2 வேட்பு மனுக்கள்), கொ. மகேந்திரன், சி. மணிவண்ணன், கருத்தோவியம் (2 வேட்பு மனுக்கள்), தீ.வேடியப்பன் ஆகியோர் 9 வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டன. இதில்,  தீ. வேடியப்பன் இருளர் (எஸ்.டி) சமூகத்தைச் சேர்ந்தவர். அரூர் சட்டப் பேரவைத் தொகுதியானது எஸ்.சி தனித் தொகுதி என்பதால் தீ. வேடியப்பன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், சுயேச்சை வேட்பாளர்களை 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். ஆனால் 10-க்கும் குறைவான வாக்காளர்கள் முன்மொழிந்ததால் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai