Enable Javscript for better performance
பெண் குழந்தைகள் உரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை- Dinamani

சுடச்சுட

    

    பெண் குழந்தைகள் உரிமையை உறுதி செய்ய  வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை

    By DIN  |   Published on : 28th March 2019 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி செய்ய வலியுறுத்தி, தருமபுரியில் புதன்கிழமை விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது .
    தமிழ்நாடு இளம் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் சேவைக்கான கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சிக்கு, அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
    தொண்டு நிறுவன இயக்குநர்கள் சங்கர்(டீப்ஸ்), சரவணன் (சீட்ஸ்), தர்மலிங்கம் (ஆர்டிஎஸ்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    இதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெண் குழந்தைகள் உரிமைகளை, பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் அனைவரும் குழந்தைகள் என்ற சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
    சுமங்கலி திட்டம் உள்ளிட்ட சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். நலவாழ்வு அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அனைவரும் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
    தருமபுரி தொலைத்தொடர்பு நிலையம் முன் தொடங்கி இந்த விழிப்புணர்வு பரப்புரை, மொரப்பூர், பொம்மிடி, அரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai