Enable Javscript for better performance
ரத்த வங்கி விவகாரத்தில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை- Dinamani

சுடச்சுட

    

    ரத்த வங்கி விவகாரத்தில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை

    By DIN  |   Published on : 28th March 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அரசு ரத்த வங்கி விவகாரம் தொடர்பான வெளியான செய்திகளால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
    இது குறித்து தருமபுரியில், தமிழக அரசு செவிலியர் சங்க மாநில பொதுச் செயலர் வளர்மதி,  அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் முருகன் ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
    தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 7 கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு முன்பே, முதல் கட்ட விசாரணையின்பேரில் தரமற்ற ரத்தம் ஏற்றப்பட்டதாகவும், முறையாக ரத்த வங்கிப் பராமரிக்கப்படவில்லை எனக் கூறி, தருமபுரி ரத்த வங்கியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வு தொழில்நுட்பநர் உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    இந்த குற்றாச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்.  கெட்டுப்போன அல்லது தரமற்ற ரத்தத்தை யாருக்கும் செலுத்த முடியாது.
    தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 8 லட்சம் ரத்த யூனிட்கள் நோயாளிகளுக்குச் செலுத்தப்படுகின்றன.  மருத்துவ கூற்றின்படி, ரத்தம் செலுத்திய பின் சாதாராண விளைவுகள் 1 சதவீதமும், தீவிர பின் விளைவுகள் 0.1 சதவீதமும் ஏற்படும் என உலக நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
    அதேபோல,  தமிழக அரசு மருத்துவமனைகளில் அனைத்து ரத்த வங்கிகளும் சர்வதேச தரத்தில் செயல்படுகின்றன.  அனைத்து நிலையிலும் தீவிர சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது.
    கர்ப்பிணிகள் உயிரிழந்த சம்பவத்தில் முழுமையான விசாரணைக்கு முன்பே எங்கள் மீது நடவடிக்கை கோருவது வருத்தமளிக்கிறது.  இந்த விவகராத்தில், முழுமையான விரிவான விசாரணை நடத்திட வேண்டும்.  அவ்வாறு நடத்தும் விசாரணையில் மருத்துவ அலுவலர்கள்,  செவிலியர்கள், ஊழியர்கள் மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டால், கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்கள் சங்கமும் துணை நிற்கும்.
    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சுமார் 1,800 பிரசவங்களும்,  சுமார் 1,000 உயர் அறுவை சிகிச்சைகளும், 2,000 விபத்து தொடர்பான சிகிச்சைகளும் நடைபெறுகின்றன.
    இத்தகைய அனைத்து சிகிச்சைகளுக்கும் ரத்தம் செலுத்துவது இன்றியமையாதது.  ரத்தம் செலுத்துவதால் உயிரிழப்பு எனக் கூறுவதால்,  மக்களிடையே தேவையற்ற ஐயமும், அச்சமும் ஏற்படும்.  எனவே, இந்த விவகாரத்தில் ரத்த வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்து முமுமையான விசாரணை நடத்த வேண்டும்.  மேலும்,  பொதுமக்களும், நோயாளிகளும் தேவையற்ற குழப்பம், அச்சம் கொள்ள வேண்டாம் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai