10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மோளையானூர் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக்.

ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக். பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மோளையானூர் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இப் பள்ளியில்  சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களை 10 மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர்.  தமிழில் 99,  ஆங்கிலத்தில் 96,  கணிதத்தில் 98,  அறிவியலில் 99,  சமூக அறிவியலில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 
தேர்வு எழுதிய 108 மாணவ,  மாணவியர்களில் 480 - க்கு மேல் 6 பேரும்,  450-க்கு மேல் 28 பேரும், 400 - க்கு மேல்  56 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.  100 சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ள ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரை அந்தப் பள்ளியின் தாளாளர் என்.குப்புசாமி, செயலர்  மருத்துவர் பழனிசாமி, பொருளாளர் நைனான்,  துணைச் செயலர் சாமிக்கண்ணு,  இயக்குநர் செல்வம்,  மேலாளர் கே.கனி, பள்ளி முதல்வர் (பொறுப்பு) முத்தமிழ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

குறிஞ்சி மெட்ரிக். பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சின்னாங்குப்பம் குறிஞ்சி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
 இப் பள்ளி மாணவர்கள் 500-க்கு 494,  487, 485 உள்ளிட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 7 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 12 பேரும் நூற்றுக்கு நூறு  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தலா 99 மதிப்பெண்களை கணிதம் பாடத்தில் மூவரும், அறிவியல் பாடத்தில் இருவரும்,  சமூக அறிவியல் பாடத்தில் 8 பேரும் பெற்றுள்ளனர்.
இதேபோல், தலா 90 மதிப்பெண்களுக்கு மேல் தமிழில்  22,  ஆங்கிலத்தில்  8, கணிதத்தில் 11, அறிவியலில் 18,  சமூக அறிவியல் பாடத்தில் 51 மாணவர்களும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ள சின்னாங்குப்பம் குறிஞ்சி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரை அந்தப் பள்ளியின் தலைவர் பி.தமிழ்மணி,  செயலர் எல்.ராஜேந்திரன், பொருளர் முருகன், பள்ளி முதல்வர் எஸ்.கார்த்திகேயன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

ஸ்ரீ ராம் மெட்ரிக். பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில்  490-க்கு மேல் 2 பேரும்,  480 - க்கு மேல் 11 பேரும்,  470 - க்கு மேல் 25 பேரும்,  450 - க்கு மேல் 43 பேரும்,  400 - க்கு மேல் 90 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 
அறிவியல் பாடத்தில் 9 பேர்,  சமூக அறிவியல் பாடத்தில் 13 பேர் நூற்றுக்கு நூறு  மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதேபோல், பாடவாரியாக தமிழில் 98,  ஆங்கிலத்தில் 97, கணிதம் 99 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 
10 - ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 154 மாணவ, மாணவியர்களில் 90 பேர் 400 - க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ள ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் மாணவ, மாணவியரை ஸ்ரீ ராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் மு.வேடியப்பன்,  தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குநர் வே.தமிழ்மணி,  பள்ளி முதல்வர்கள் ஜான் இருதயராஜ், சாரதி மகாலிங்கம், உஷா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


அரூர் ஜெயம் வித்யாலயா  மெட்ரிக். பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரூர் ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இப் பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 488, 487, 486 உள்ளிட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 100 சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ள மாணவ, மாணவியரை அந்தப் பள்ளியின் தலைவர் ரத்தினம், துணைத் தலைவர் பன்னீர்செல்வம்,  தாளாளர் கிருஷ்ணவேணி, செயலர் கனிமொழி, பள்ளி முதல்வர் கார்த்திகேயன், பொறுப்பாசிரியர் சிலம்பரசன், மேலாளர் கிருஷ்ணன், பள்ளி நிர்வாக இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com