தீ விபத்தில் லாரி சேதம்
By DIN | Published On : 07th May 2019 09:53 AM | Last Updated : 07th May 2019 09:53 AM | அ+அ அ- |

தருமபுரியில் தீப்பற்றி எரிந்த லாரி முற்றிலும் சேதமடைந்தது.
பழைய தருமபுரியில் பழுது பார்க்கும் பணிக்காக தனியாருக்குச் சொந்தமான லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த லாரி திங்கள்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த தருமபுரி தீயணைப்பு படையினர் நிகழ்விடத்துக்கு சென்று லாரியில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், லாரி மளமளவென எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து தருமபுரி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.