முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 15th May 2019 08:18 AM | Last Updated : 15th May 2019 08:18 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலையில் மரம் விழுந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன், லேசான மழை பெய்தது. அப்போது அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலையில் சாலையோரத்தில் இருந்த 2 புளிய மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர். இதனால், அரூர் - சேலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் வந்த வாகனங்கள் அனைத்தும் பேதாதம்பட்டி வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.