சுடச்சுட

  

  8 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு: நேர்மையாக நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 16th May 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மக்களவைத் தொகுதியில் எட்டு வாக்குச்  சாவடிகளில் நடைபெற உள்ள மறுவாக்குப் பதிவை நேர்மையாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
  தருமபுரியில் அக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அக் கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு தலைமையில் நடைபெற்றது.
  கூட்டத்தில், தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதியில் எட்டு வாக்குச் சாவடிகளில் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள மறுவாக்குப் பதிவை நேர்மையான முறையில் நடத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  வாக்குப் பதிவு அன்று துணை ராணுவத்தினரை 8 வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தி கண்காணிக்க வேண்டும்.
  தருமபுரி மாவட்டத்தில், நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் லாரி மற்றும் டிராக்டர்களில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும்.
  வறட்சியால் காய்ந்துபோன மரங்கள், பயிர்களைக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.
  மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாளை அனுசரிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தருமபுரி நகரத் தலைவர் எஸ். செந்தில்குமார், வட்டாரத் தலைவர்கள் ஆர். சுபாஷ், இ. மாதப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai