வேளாண் கருவிகள் பயன்பாடு குறித்து ஆய்வு
By DIN | Published On : 16th May 2019 09:23 AM | Last Updated : 16th May 2019 09:23 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாரத்தில் வேளாண் கருவிகள் பயன்பாடு குறித்து உழவர் பயிற்சி நிலையத் துணை இயக்குநர் புதன்கிழமை ஆய்வு செய்தார் .
பென்னாகரம் வட்டாரத்தில், அஞ்சேனஅள்ளி, கூட்டு நாயக்கனஅள்ளி, சாலை குள்ளாத்திரம்பட்டி, நூலஅள்ளி, பெரும்பாலை, தொண்ணுட்லஅள்ளி ஆகிய பகுதிகளில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு வழங்கப்பட்ட டிராக்டர்கள், ரோடோ வீட்டர்கள், பவர் டிரல்லர் மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை குறித்தும், அதன் பயன்பாடு தொடர்பாகவும், கூட்டுப் பண்ணையக் குழுக்களின் செயல்பாடுகள், ஆவணங்கள் பராமரிப்புக் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வின்போது, உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் கீதா, பென்னாகரம் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலர் பா.புவனேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர்கள் கோகிலா, தமிழ்ச்செல்வி, முருகேசன், சக்திவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.