முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
இருசக்கர வாகனம் மோதல்: முன்னாள் எம்.பி. காயம்
By DIN | Published On : 18th May 2019 08:52 AM | Last Updated : 18th May 2019 08:52 AM | அ+அ அ- |

தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் எம்.பி. மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் காயமடைந்தார்.
திமுக சட்ட திட்ட திருத்தக்குழு இணைச் செயலரும், தருமபுரி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ஆர்.தாமரைச்செல்வன், மறுவாக்குப் பதிவையொட்டி தேரதல் பணியை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தருமபுரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
தருமபுரி பாரதிபுரம் 60 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த போது, அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் அவர் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் கீழே விழுந்து காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.