முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தொலைத்தொடர்பு இணைப்பை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 18th May 2019 08:52 AM | Last Updated : 18th May 2019 08:52 AM | அ+அ அ- |

தருமபுரி தொலைத்தொடர்பு மாவட்டத்தை சேலம் மாவட்டத்துடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி, அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில், வெள்ளிக்கிழமை தருமபுரி தொலைத்தொடர்பு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி.கிருஷ்ணன், கூட்டமைப்புத் தலைவர்கள் கே.மணி, குப்புசாமி, அதிகாரிகள் சங்கத் தலைவர் கோபாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், லாபகரமாக மக்களுக்கு சேவையாற்றி வரும் தருமபுரி தொலைத் தொடர்பு மாவட்டத்தை, வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்துடன் இணைப்பது என்ற முடிவை கைவிட வேண்டும். தருமபுரி தொலைத்தொடர்பு மாவட்டம், தொடர்ந்து தனியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.