முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
மறுவாக்குப் பதிவு: தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 18th May 2019 08:53 AM | Last Updated : 18th May 2019 08:53 AM | அ+அ அ- |

தருமபுரியில் மறுவாக்குப் பதிவு பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நத்தமேடு, அய்யம்பட்டி, ஜாலிபுதூர் ஆகிய கிராமங்களில் உள்ள 8 வாக்குச் சாவடிகளில், மக்களவை பொதுத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கு மறுவாக்குப் பதிவு மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்த வாக்குச் சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவின் போது, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரகமதுல்லா கான், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா ராணி, வட்டாட்சியர்கள் தமிழரசன், ராதாகிருஷ்ணன், சரவணன், ராஜசேகரன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.