அரூரில் 22 தனியார் பள்ளி பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து
By DIN | Published On : 18th May 2019 08:52 AM | Last Updated : 18th May 2019 08:52 AM | அ+அ அ- |

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் இயக்கப்படும் 22 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளின் தகுதிச் சான்றுகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளை ஆய்வு செய்வதற்கான முகாம் நம்பிப்பட்டியில் நடைபெற்றது. இந்த முகாமினை தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தொடக்கி வைத்தார்.
இந்த முகாமில், 290 தனியார் பள்ளி வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், குறைபாடுடைய 22 பேருந்துகளின் தகுதிச் சான்றுகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், சிறு குறைபாடுகள் உடைய 17 பேருந்துகளை குறைபாடுகளை நிவர்த்தி செய்து வர முகாமில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.