விவசாயிகளுக்கு மானாவாரி வேளாண் மேம்பாட்டு பயிற்சி
By DIN | Published On : 26th May 2019 05:07 AM | Last Updated : 26th May 2019 05:07 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமன அள்ளியில் வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கு மானாவாரி வேளாண் மேம்பாடு தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குநர் சு.தேன்மொழி தலைமை வகித்து, நீடித்த நிலையான மானாவாரி வேளாண் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள், நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேளாண் அலுவலர் சு. இளங்கோவன், நல்லம்பள்ளி வட்டாரத்தில் பாலஜங்கமனஅள்ளி ஊராட்சியில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண் மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்த ஒரு தொகுப்பாக 2500 ஏக்கர் மானாவாரி நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விவசாயிகளிடம் விளக்கினார். இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.