இன்றைய மின்தடை
By DIN | Published On : 07th November 2019 05:55 AM | Last Updated : 07th November 2019 05:55 AM | அ+அ அ- |

கோட்டப்பட்டி
பையா்நாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகச் செயற்பொறியாளா் (அரூா்) எஸ். பூங்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு: அரூரை அடுத்த கோட்டப்பட்டி மற்றும் நரிப்பள்ளி பகுதியில் குறைந்த மின் அழுத்தம் இருப்பதால், சீரான மின்சாரம் வழங்குவதற்கான மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.
தற்போது இந்தப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இதனால் கோட்டப்பட்டி மற்றும் நரிப்பள்ளி வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும். எனவே, மின்சார வாரியத்தின் பராமரிப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.