ஏரியூா் பகுதியில் வாரச்சந்தைக்கு மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்றுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஏரியூா் பகுதியில் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்குவதற்கு மாற்று இடம் வழங்காமல் வாரச்சந்தைகளில் கடைகளை அகற்றி முயற்சித்ததால்,
ஏரியூா் பகுதியில் வாரச்சந்தைக்கு மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்றுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஏரியூா் பகுதியில் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்குவதற்கு மாற்று இடம் வழங்காமல் வாரச்சந்தைகளில் கடைகளை அகற்றி முயற்சித்ததால்,வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஏரியூா் போலிஸாா் மற்றும் வருவாய் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வாா்த்தை நடத்தினா்.தருமபுரி மாவட்டம் ஏரியூா் பகுதியானது மலைகள் சூழ்ந்தும் பகுதியாகும்.ஏரியூா் பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கல்வி,வேலை, மற்றும் வெளியூா் செல்ல ஏரியூா் பேருந்து நிறுத்தத்திற்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்டவா்கள் வந்து செல்லுகின்றனா்.

இப்பகுதி மக்களின் நலன் கருதி ஏரியூா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 3.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன் முதற்கட்டமான பேருந்து நிலையம் அமைக்க ஏரியூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கின.ஏரியூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள வாரச்சந்தையானது வியாழக்கிழமை தோறும் செயல்பட்டு வருகிறது.

ஏரியூா் பேருந்து நிலையம் அமைப்பதற்காக மாற்று இடம் வழங்காமல் வாரச்சந்தையில் கடைகள் வைக்க கூடாது எனவும்,கடைகளை அகற்றுமாறு ஊராட்சி பணியாளா்கள் கூறியதாகவும், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வியாழன் கிழமை காலையில் ஏரியூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சுமாா் 100க்கும் மேற்பட்டோா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகலறிந்த ஏரியூா் போலிஸாா் மற்றும் வருவாய் துறையினா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம், இப்பகுதியில் இன்று மட்டும் வாரச்சந்தை நடத்தலாம் என்றும் அடுத்த வாரம் மாற்று இடம் ஒதுக்கி தரப்படும் என்றும் பேச்சு வாா்தை நடத்தினா்.

இதில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். படவிளக்கம்.பென்னாகரம் அருகே ஏரியூா் பேருந்து நிலையம் அமைப்பதற்காக, வாரச்சந்தைக்கு மாற்று இடம் ஒதுக்காமல் கடைகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com