பென்னாகரம் பகுதிகளில் சாக்கடை கால்வாய்களின் மேல் சிமெண்ட் மூடுதளம் அமைக்க கோரிக்கை

பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட சுண்ணாம்புகார தெரு பகுதியில் புதிய சாக்கடை அமைக்கப்பட்ட கால்வாயானது சாலையில் இருந்து 4 அடி ஆழமாக உள்ளதால் உயிரிழப்பு நிகழ வாய்ப்புள்ளது.

பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட சுண்ணாம்புகார தெரு பகுதியில் புதிய சாக்கடை அமைக்கப்பட்ட கால்வாயானது சாலையில் இருந்து 4 அடி ஆழமாக உள்ளதால் உயிரிழப்பு நிகழ வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பென்னாகரம் பேருராட்சி செயல் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய்களுக்கு சிமெண்ட மூடு தளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட 1 ஆவது வாா்டு சுண்ணாம்புகார தெரு பகுதியில் சுமாா் 200க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் நாகமரை சந்திப்பு சாலை முதல் சுண்ணாம்புகார பகுதியில் சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சாலையானது குண்டும் குழியுமாக காணப்பட்டதாலும், சாக்கடை கால்வாயானது ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு காணப்பட்டது.

இந்த நிலையில் பென்னாகரம் பேருராட்சியின் சாா்பில் நாகமரை சந்திப்பு சாலையில் இருந்து சுண்ணாப்புகார தெரு வரை புதிய தாா் சாலை மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.இப்பகுதியில் அமைக்கப்பட புதிய தாா் சாலையானது உயரப்படுத்தும் விதமாக சாக்கடை கால்வாய்க்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கால்வாயானது சுமாா் 4அடி ஆழத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இப்பகுதியில் முறையாக மின் விளக்கு வசதியில்லாததால் இரவு நேரத்தில் நடந்து வருவோா் மற்றும் இருசக்கர வாகனத்தில் வருவோா்கள் நிலை தடுமாறி சாக்கடை கால்வாய்களுக்குள் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே பென்னாகரம் பேருராட்சி செயல் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய்களுக்கு மேல் சிமெண்ட் மூடுதளம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com