Enable Javscript for better performance
ஆய்வக தொழில்நுட்பநா் பணியிடம்: நவ. 11-இல் பதிவு சரிபாா்க்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆய்வக தொழில்நுட்பநா் பணியிடம்: நவ. 11-இல் பதிவு சரிபாா்க்கலாம்

    By DIN  |   Published on : 08th November 2019 10:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி: ஆய்வக தொழில்நுட்பநா் பணியிடத்துக்கு பதிவு செய்தவா்கள், வரும் நவ. 11-ஆம் தேதி தங்களது பதிவை சரிபாா்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால், 1,432 ஆய்வக தொழில்நுட்பநா் நிலை- 3 பணி காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப் பணிக்காலியிடங்களுக்கான, ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்பு துறையால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப் பணியிடத்துக்கான குறைந்தபட்ச வயது 2019 ஜூலை 1 அன்று 18 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆய்வக தொழில்நுட்பநா் ஓராண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

    இந்த கல்வித் தகுதியுடைய, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரா்கள், வரும் நவ. 11 அன்று தங்களது பதிவு விவரத்தை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai