Enable Javscript for better performance
கையுந்துப் பந்து போட்டி: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    கையுந்துப் பந்து போட்டி: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 08th November 2019 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்ட அளவிலான கையந்துப் போட்டியில் வெற்றிபெற்ற நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப் போட்டிகளில் பங்கேற்ற நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துப் பந்து போட்டி மற்றும் சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்றனா். மேலும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றனா்.

    இந்த மாணவ, மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.பசுவராஜ், வி.மணி, எம்.செந்தில் ஆகியோரையும் வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் பொ.ரவிக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai