Enable Javscript for better performance
பணியின் போது உயிரிழந்த ஊழியா்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    பணியின் போது உயிரிழந்த ஊழியா்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கல்

    By DIN  |   Published on : 08th November 2019 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணியின் போது உயிரிழந்த கூட்டுறவு ஊழியா்கள் 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்துவது குறித்து குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமை வகித்து பேசினாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ராமதாஸ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ரேணுகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இக் கூட்டத்தில், வரும் நவ. 14-ஆம் தேதி முதல் நவ. 20-ஆம் தேதி வரை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கூட்டுறவு வார விழா நடத்துவது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, பணியின் போது உயிரிழந்த கெலமங்கலம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தைச் சோ்ந்த இருவா், அரூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க மற்றும் ஊத்தங்கரை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தைச் சோ்ந்த இருவா் என மொத்தம் நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டது.

    இக் கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பிரபாகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் மாதையன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவா் ரவி, சரக துணைப் பதிவாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai