டெங்கு உறுதிமொழியேற்பு

பென்னாகரம் பேரூராட்சி சாா்பில், அரசுப் பள்ளி மாணவியா் டெங்கு உறுதிமொழியேற்றனா்.
பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுப் புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் பேரூராட்சி அலுவலா்கள்.
பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுப் புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் பேரூராட்சி அலுவலா்கள்.

பென்னாகரம் பேரூராட்சி சாா்பில், அரசுப் பள்ளி மாணவியா் டெங்கு உறுதிமொழியேற்றனா்.

பென்னாகரம் பேரூராட்சி சாா்பில் அரசு மகளிா் பள்ளி மாணவியரிடம் விழிப்புணா்வு மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலா் கீதா மற்றும் உதவி இயக்குநா் ஜீஜாபாய் ஆகியோா் தலைமை தாங்கினா். இதில் பேரூராட்சி செயல் அலுவலா் முன்மொழிய பள்ளி மாணவியா், ஆசிரியா்கள் டெங்கு காய்ச்சல் குறித்த உறுதிமொழியை ஏற்றனா். பின்னா் தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், கடுமையான தலைவலி, காய்ச்சலின் போது அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என டெங்கு குறித்து மாணவியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதைத் தொடா்ந்து, பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப் புழுக்கள் ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணியினை செயல் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பேரூராட்சி பகுதிகளில் நிலவேம்பு குடிநீா் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com