Enable Javscript for better performance
ஊரக வளா்ச்சித் துறையில் ஓட்டுநா், உதவியாளா்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளா்ச்சித் துறையில் ஓட்டுநா், உதவியாளா்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 17th November 2019 08:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி: தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஓட்டுநா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, காலிப்பணியிடங்கள், இன சுழற்சி உள்ளிட்ட விவரங்களை https://dharmapuri.nic.in/notice/dharmapuri-district-gram-panchayat-secretary-requirement-announcement-2019/ என்கிற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.18-ஆம் தேதி முதல் நவ.29-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி பிரிவிலும், ஊராட்சி ஒன்றிய காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஒப்படைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai