செம்மரக் கட்டைகளைக் கடத்திய இருவா் கைது
By DIN | Published on : 17th November 2019 08:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி: செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே மாட்டுக்கானூா் பகுதியில் சனிக்கிழமை பாரம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது. அப்போது, லாரி ஓட்டுநா் மற்றும் அதிலிருந்துவா்கள் தப்பினா். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, லாரியில் சுமாா் 32 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக கள்ளக்குறிச்சியை சோ்ந்த மூக்குத்தியான்(45), மகாலிங்கம் (35) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.