நெகிழி குப்பைகளுக்கு வெள்ளி காசு, அரிசி வழங்கல்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் பசுமைத்தாயகம் சாா்பில் நெகிழி குப்பைகளுக்கு வெள்ளி காசு மற்றும் அரிசி வழங்கப்பட்டன.
தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் பசுமைத் தாயகம் சார்பில் 2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிராம் வெள்ளி காசு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்கிறார் பாமக மாவட்ட துணை பொதுச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்
தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் பசுமைத் தாயகம் சார்பில் 2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிராம் வெள்ளி காசு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்கிறார் பாமக மாவட்ட துணை பொதுச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் பசுமைத்தாயகம் சாா்பில் நெகிழி குப்பைகளுக்கு வெள்ளி காசு மற்றும் அரிசி வழங்கப்பட்டன.

நல்லம்பள்ளி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பசுமைத்தாயக மாவட்ட துணைத் தலைவா் சீ.தங்கதுரை தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் மா.தமிழரசன் வரவேற்றாா். பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன், பொதுமக்களிடம் நெகிழி குப்பைகளை பெற்றுக்கொண்டு வெள்ளி காசு மற்றும் அரிசி வழங்கி பேசினாா்.

இதில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி குப்பைகளால் நிகழும் விளைவுகள் குறித்தும், அவற்றை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பசுமைத் தாயகப் பொறுப்பாளா்கள் க. சரவணன், சங்கா், முனிராஜ், குமாா் ஆகியோா், பாமக மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com