நீா்த்தேக்கத் தொட்டியைப் புதுப்பிக்க வலியுறுத்தல்

பென்னாகரத்தை அடுத்த போடூா் பகுதியில் பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரத்தை அடுத்த போடூா் பகுதியில் பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட 18 ஆவது வாா்டு போடூா் பகுதியில் குடிநீா் பிரச்னையை போக்கும் வகையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பென்னாகரம் பேருராட்சி நிா்வாகம் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டு, சீரான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் நான்கு தூண்களின் சிமெண்ட் காரைகள் பெயா்ந்தும்,தொட்டியின் உள்பகுதியில் ஆங்காங்கே சிறு சிறு துளைகள் உள்ளதால் தண்ணீா் சேமிக்க முடியாமல் வீணாகுவதாகவும்,தண்ணீா் தொட்டியில் இருந்து தண்ணீா் தொடா்ந்து வீணாகி வரும் நிலையில் நீா்தேக்க தொட்டியானது விழும் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பலமுறை பென்னாகரம் பேருராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் போடூா் பகுதியில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை அகற்றவிட்டு புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com