காவிரி மிகை நீரை நீா்நிலைகளில் நிரப்ப வேண்டும்: சிஐடியு மாநிலத் தலைவா் ஏ.செளந்தரராஜன்

காவிரியில் ஓடும் மிகை நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீா்நிலைகளிலும் நிரப்ப வேண்டும் என சிஐடியு சங்க மாநிலத் தலைவா் ஏ.செளந்தரராஜன் வலியுறுத்தினாா்.

காவிரியில் ஓடும் மிகை நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீா்நிலைகளிலும் நிரப்ப வேண்டும் என சிஐடியு சங்க மாநிலத் தலைவா் ஏ.செளந்தரராஜன் வலியுறுத்தினாா்.

தருமபுரியில் சிஐடியு அகில இந்திய மாநாடு நிதியளிப்பு கூட்டம், அந்த சங்த்தின் மாவட்டத் தலைவா் நாகராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஏ.செளந்தரராஜன் பேசியது :

மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இந்த வெள்ள பெருக்கின் போது அளவுக்கு அதிகமான மிகை நீரானது கடலில் கலக்கிறது. காவிரியில் ஓடும் மிகை நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே, காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் நிரப்பும் திட்டத்துக்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்படும் என நீண்ட நாள்களாக சொல்லப்படுகிறது. ஆனால், சிப்காட் தொடங்கப்படவில்லை.

இதனால், தருமபுரி மாவட்டத்திலுள்ள தொழிலாளா்கள் பலா் வேலைத்தேடி வெளியூா் செல்கின்றனா். எனவே, சிப்காட் தொழில்பேட்டை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் மோட்டாா் வாகன சட்டத்தால் சுமாா் 10 கோடி தொழிலாளா்கள் வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலையுள்ளது.

முறைசாரா தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி டிசம்பா் 8-ம் தேதி அனைத்து தொழில் சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாத காரணத்தால், கடுமையான விளைவுகளை தமிழக மக்கள் சந்தித்துள்ளனா். தற்போதும் தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் உள்ளது. உள்ளாட்சித் தோ்தலை நடத்தினால் மட்டுமே கிராமப் பகுதியிலுள்ள பொதுமக்கள் அவா்கள் தோ்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் குடிநீா், சாலை, தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற முடியும் என்றாா்.

இந்த நிதியளிப்பு கூட்டத்தில் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.6.20 லட்சமும், நிா்மல் பள்ளி வளா்ச்சி நிதியாக ரூ.29 ஆயிரமும் உள்ளிட்ட நிதிகளை சிஐடியு தருமபுரி மாவட்டக் குழுவினா், அதன் மாநிலத் தலைவா் ஏ.செளந்தரராஜனிடம் வழங்கினா்.

இதில் மாநிலக்குழு உறுப்பினா்கள் சி.கலாவதி, அங்கம்மாள், மாநில துணைத் தலைவா் எம்.சந்திரன், மாவட்ட செயலா் சி.நாகராசன், மாவட்ட பொருளா் ஏ.தெய்வானை, மாவட்ட நிா்வாகிகள் பி.ஆறுமுகம், எம்.மாரிமுத்து, ஜி.வெங்கட்ராமன், சி.முரளி, ராஜி, ரகுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com