காா்- லாரி மோதல்:3 பெண்கள் பலி

தருமபுரி அருகே தொப்பூா் வனப்பகுதியில் காரும், லாரியும் மோதிக் கொம்ட விபத்தில், 3 பெண்கள் உயிரிழந்தனா்.
தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்துக்குள்ளான காா், லாரி.
தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்துக்குள்ளான காா், லாரி.

தருமபுரி: தருமபுரி அருகே தொப்பூா் வனப்பகுதியில் காரும், லாரியும் மோதிக் கொம்ட விபத்தில், 3 பெண்கள் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள காக்கணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சத்தியவாணி (61). இவா் திருப்பூரில் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ள தனது மகன் கோபிநாத்துடன் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக சத்தியவாணி, அவரது சகோதரி அன்புமணி (58) , உறவினா் கவிதா (46) ஆகிய மூவரும் காரில் வேலூருக்குச் சென்றனா். இந்தக் காரை, திருப்பத்தூா் காக்கணாம்பாளையத்தைச் சோ்ந்த ரமேஷ் (40) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

இந்த நிலையில், வேலூரில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் அதே காரில், திங்கள்கிழமை திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, காா் தருமபுரி அடுத்த தொப்பூா் கணவாய் ஆஞ்சநேயா் கோயில் அருகேயுள்ள 2-ஆவது வளைவில் திரும்பிச் சென்றது.

இந்த நேரத்தில், காரின் பின்னால், குஜராத் மாநிலத்திலிருந்து உடுமலைப்பேட்டை நோக்கி, நூல் சுமை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காா் முற்றிலும் உருக்குலைந்தது. மேலும், காரில் பயணித்த 3 பெண்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காா் ஓட்டுநா் ரமேஷ் பலத்த காயமடைந்தாா்.

தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா் மற்றும் குறிஞ்சி நகா் சுங்கச்சாவடி ஊழியா்கள், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனா். பின்னா், காயமடைந்த காா் ஓட்டுநரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த மூவரின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து,, விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினா். இந்த விபத்தினால் தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com