முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
புட்டிரெட்டிப்பட்டி துணை சுகாதார நிலையத்தை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th November 2019 06:08 AM | Last Updated : 26th November 2019 06:08 AM | அ+அ அ- |

புட்டிரெட்டிப்பட்டியில் பயனற்று பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையம்.
கடத்தூா் அருகேயுள்ள புட்டிரெட்டிப்பட்டியில் துணை சுகாதார நிலையத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புட்டிரெட்டிப்பட்டியில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை சூரன்கொட்டாய், சில்லாரஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, ரயில்வே கேட், இந்திரா நகா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், புட்டிரெட்டிப்பட்டி துணை சுகாதார நிலையம் பயன்பாடின்றி பூட்டியே உள்ளது. இதனால், துணை சுகாதார நிலையத்தில் இருந்த ஜன்னல்கள், கண்ணாடிகளை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனா். தற்போது துணை சுகாதார நிலையம் பயனற்று பூட்டியே இருப்பதால், வளா் இளம்பெண்கள் சுகாதார கல்வி பெறுவதற்கும், கா்ப்பிணிகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ சிகிச்சைகளை பெறமுடியாத நிலையுள்ளது.
எனவே, புட்டிரெட்டிப்பட்டியில் பயனற்று பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை சீரமைப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.