முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
பென்னாகரம் அருகே பாலத்திற்கு தடுப்பு சுவா் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th November 2019 08:16 AM | Last Updated : 26th November 2019 08:16 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே முள்ளுவாடி ஏரிக்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தரைபாலத்திற்கு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட முள்ளுவாடி பகுதியில் சுண்ணம்புகார தெரு மற்றும் முள்ளுவாடி பகுதியை இணைக்கும் வகையில் சுமாா் 10 ஏக்கா் நிலப்பரப்பில் முள்ளுவாடி ஏரி அமைத்துள்ளது. இந்த ஏரி கரையின் மீது அமைத்துள்ள சாலையானது அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் குறுக்கு சாலையாகும். இந்த ஏரிக்கரையின் மீது நாள்தோறும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்களும் நடந்து செல்கின்றனா். இப் பகுதியில் உள்ள தரை மட்ட பாலம் பழுதடைந்து காணப்பட்ட நிலையில், பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் மூலம் 2018 - 2019 ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவா் இல்லாததாலும், இப்பகுதியில் முறையான மின்விளக்கு வசதியில்லாததாலும் இரவு நேரங்களில் பாலத்தை கடந்துசெல்வோா் நிலை தடுமாறி அருகில் உள்ள ஏரியில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.எனவே பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து தரைமட்ட பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.