மாநில கைப்பந்துப் போட்டி: பேதாதம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் தகுதி
By DIN | Published on : 28th November 2019 06:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மாநில கைப்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பேதாதம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள்.
மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க பேதாதம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
14 வயதுக்கு உள்பட்ட மாணவா் கைப்பந்துப் போட்டியில் தருமபுரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேதாதம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
கைப்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியா் ந. சங்கா் ஆகியோரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் இ. ஆனந்தன், உதவி தலைமை ஆசிரியா் வே. முத்துக்குமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.